உள்நாடு

எகிறும் கொரோனாவுக்கு பலியாகும் உயிர்கள்

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (16) உறுதி செய்துள்ளார்.

அவற்றில் முதல் 20 மரணங்கள் 2021 மே மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ளதுடன், 21 ஆவது மரணம் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்றதாகும். அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 962 ஆகும்.

01. இமதூவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர், இமதூவ வைத்தியசாலையில் இருந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே மாதம் 11 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

02. முருத்கஹமுல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 15 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றால் ஏற்பட்ட நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

03. அநுராதபுரம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 58 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 14 ஆம் திகதி அன்று உயிரிழ்துள்ளார். கொவிட் நியூமோனியா, நீரிழிவு மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

04. மொரட்டுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 16 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நாட்பட்ட நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

05. மீரிகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 12 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, உயர் குருதியழுத்தம், நீரிழிவு மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

06. இங்கிரிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 15 ஆம் திகதி அன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 மார்புத் தொற்று, நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

07. புலத்சிங்கள பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 14 ஆம் திகதி அன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

08. நேபட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய ஆண் ஒருவர், ஹொரன ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 16 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

09. பதுளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 37 வயதுடைய ஆண் ஒருவர், பண்டாரவெல வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 16 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, பல உறுப்புக்கள் செயலிழந்தமை, கொவிட் நியூமோனியா மற்றும் நுரையீரல் வீக்கம் மற்றும் நீரழிவு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

10. கெலிஓயா பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய ஆண் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 15 ஆம் திகதி அன்றுஉயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

11. யாழ்ப்பாணம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய பெண் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 15 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நியூமோனியா மற்றும் தீவிர சுவாசக் கோளாறு போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

12. ஹந்தபான்கொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 67 வயதுடைய ஆண் ஒருவர், ஹொரன ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 14 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நீரிழிவு மற்றும் இதயநோய் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

13. ஹபராதுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 77 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 11 ஆம் திகதி அன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

14. எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய ஆண் ஒருவர், எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 14 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

15. நாக்கியாதெனிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 52 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 14 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

16. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 14 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

17. கடவத்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 56 வயதுடைய ஆண் ஒருவர், வெலிசறை மார்புச் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 16 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

18. ஹாலிஎல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 53 வயதுடைய ஆண் ஒருவர், கந்தேகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 15 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியாவுடன் பல உறுப்புக்கள் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

19. மஹயியாவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 57 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 16 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

20. களுத்துறை தெற்கு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 15 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

21. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 81 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 பெப்ரவரி 07 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று நிலைமையால் மோசமடைந்த இதய நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

2021ம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

அரச நிறுவனங்களை அரசாங்க கட்டிடத்திற்கு மாற்ற நடவடிக்கை

கல்முனை மாநகர நிதி மோசடி: ஆணையாளருக்கு விளக்கமறியல்- முதல்வருக்கு வெளிநாட்டு தடை