விளையாட்டு

‘இப்போதைக்கு இந்தியாவில் வாய்ப்பில்லை’

(UTV |  சென்னை) – ஐபிஎல் தொடரை மீண்டும் எங்கு நடத்துவது என்பதில் பிசிசிஐ மூன்று நாடுகளை டிக் செய்து வைத்துள்ளது. அதில், இன்றைய நிலவரப்படி அந்த ஒரு நாட்டுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது.

நாடு முழுவதும் வீசும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக, ஐபிஎல் 2021 தொடர், திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், பல வெளிநாட்டு வீரர்கள் மாலைத்தீவு அழைத்துச் செல்லப்பட, இந்திய வீரர்கள் உடனடியாக வீடு திரும்பினர்.

மீண்டும் ஐபிஎல் தொடரை எப்போது தொடங்குவது, எங்கு தொடங்குவது என்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருப்பதால், இங்கு மீண்டும் ஐபிஎல் தொடங்க வாய்ப்பே இல்லை என்பது மட்டும் உறுதி.

பிசிசிஐ தலைவர் கங்குலியும் ‘இப்போதைக்கு இந்தியாவில் வாய்ப்பில்லை’ என்று உறுதிப்படுத்திவிட்டார். பிசிசிஐ ஆலோசனை அதேசமயம், மற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியங்களுடன், பிசிசிஐ தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கொரோனா தாக்கம் குறைவாக உள்ள நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களிடம் பேசி வருகிறது.

இதில், மூன்று நாடுகள் ஆப்ஷனில் உள்ளன. அவை இலங்கை, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம். இதில், இலங்கை மட்டும் தாங்களாகவே முன் வந்து, ஐபிஎல் தொடரை நடத்தித் தருவதாக கோரிக்கை விடுத்தது.

ஆனால், அந்த நாட்டில் எதிர்பாராதவிதமாக இப்போது தினசரி பாதிப்பு 2000க்கும் அதிகமாக எகிறி வருகிறது. நேற்று (மே.14) மட்டும் இலங்கையில் புதிதாக 2,289 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, நேற்று மட்டும் 31 பேர் இறந்திருக்கின்றனர்.

எகிறும் வைரஸ் அதேபோல், இங்கிலாந்திலும் ஐபிஎல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனும், ஐபிஎல் நடத்த இங்கிலாந்து மிகச் சிறந்த ஆப்ஷன் என்று கூறியிருந்தார். ஆனால், அங்கும் கொரோனா பாதிப்பு சற்று வீரியமாகவே உள்ளது. நேற்று மட்டும் அங்கு 2,193 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், இது மே மாதம் என்பதால், அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று கூறுகின்றனர். ஏனெனில், ஐபிஎல் மீண்டும் ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு தான் தொடங்கப்படும் என்று தெரிகிறது. அதற்குள் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு தாக்கம் மேலும் குறையலாம் என்கின்றனர்.

எண்ணிக்கை குறைவு எனினும், இலங்கை மற்றும் இங்கிலாந்தை ஒப்பிடுகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில், கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதாகவே தெரிகிறது. அங்கு புதிதாக 1,452 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஆனால், 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஸோ, இப்போதைய சூழல் படி இலங்கை, இங்கிலாந்தை காட்டிலும் யுஏஇ பெஸ்ட் என்பதே பிசிசிஐ-யின் கருத்தாக உள்ளது.

Related posts

அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை சுவீகரித்த குரோஷிய அணியின் லூகா

நான்காவது முறையாக CSK சாம்பியன்

IPL 2022 : சென்னையில் ஏப்ரல் 2ம் ஆரம்பம்