(UTV | கொழும்பு) – ரயில் சேவையில் நேரடியாக தொடர்புபடும் சேவையாளர்களுக்கு உடனடியாக கொவிட் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்காவிடின், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரயில் சேவையை முன்னெடுக்கப்போவதில்லை என ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் இயக்குநர்கள், சாரதி உதவியாளர்கள், ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், ரயில்வே நிலையப் பொறுப்பதிகாரிகள், பயணச்சீட்டு பரிசோதகர்கள் உள்ளிட்டோருக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்தப்படவேண்டும் என அச்சங்கத்தின் பிரதம செயலாளர் மனுர பீரிஸ் தெரிவித்தார்.
நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் திங்கட்கிழமை வரை ரயில்வே சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திங்கட்கிழமை முதல் ரயில்வே சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எனினும், தமது சங்கத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்படாவிடின், பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் ரயில்வே சேவைகளை தாம் முன்னெடுக்கப் போவதில்லை என தொடருந்து கட்டுப்பாட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.