உள்நாடு

அடையாள அட்டை இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியேறலாம்

(UTV | கொழும்பு) – நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டின் இறுதி இலக்கத்தின்படியே வெளியே செல்ல முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, 1, 3, 5, 7, 9 ஆகிய எண்களை அடையாள அட்டையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் ஒற்றை நாட்களிலும் 0, 2, 4, 6, 8 ஆகிய எண்களை அடையாள அடடையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் இரட்டை நாட்களிலும் அத்தியாவசியமல்லாத தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியேற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

தென் கடற்கரை பகுதியில் உலாவிய கடல் சிங்கம்

ஜனாதிபதி ஊடாக மக்களுக்கு விரைவில் நிவாரணம்