உள்நாடு

ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளில் மேலும் 600,000 டோஸ்கள் அடுத்த இரு வாரங்களுக்குள்

(UTV | கொழும்பு) – ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik V) தடுப்பூசிகளில் மேலும் 600,000 டோஸ்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சு சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே இதனை தெரிவித்துள்ளார்.

´ஸ்புட்னிக் V´ தடுப்பூசி மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட வேண்டும் என்றும் களஞ்சியத்தில் இருந்து வௌியே எடுக்கப்பட்ட பின்னர் 2 மணித்தியாலங்களுக்குள் பொது மக்களுக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சு சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதியாக 15,000 தடுப்பூசிகள் ​கடந்த மூன்றாம் திகதி இரவு இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சடுதியாக அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

உடல் ஆரோக்கியம் தொடர்பில் வைத்தியர்கள் ஆலோசனை