உள்நாடு

மேலும் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 13 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 13 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் வருமாறு

கொழும்பு மாவட்டம்

பிலியந்தலை காவல்துறை அதிகாரப்பிரிவு

கொல்லமுன கிராம சேவகர் பிரிவு

மாபே மேற்கு கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டம்

மஹபாகே காவல்துறை அதிகாரப்பிரிவு

எலபிட்டிவல நவ மஹர கிராமம்

மகுல் பொகுன கிராமத்தின் மகுல் பொகுன் வீதி

காலி மாவட்டம்

இமதுவ காவல்துறை அதிகாரப்பிரிவு

திக்கும்புர கிராம சேவகர் பிரிவு

அடநிகித கிராம சேவகர் பிரிவு

இரத்தினபுரி மாவட்டம்

பெல்மதுளை காவல்துறை அதிகாரப்பிரிவு

சன்னஸ்கம கிராம சேவகர் பிரிவு

தொம்பகஸ்வின்ன கிராம சேவகர் பிரிவு

கொடகம கிராம சேவகர் பிரிவு

கஹவத்த காவல்துறை அதிகாரப்பிரிவு

கட்டங்கே கிராம சேவகர் பிரிவு

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

சூரியவெவ காவல்துறை அதிகாரப்பிரிவின் சூரியவெவ நகரம்

கேகாலை மாவட்டம்

புளத்கொஹுபிட்டிய காவல்துறை அதிகாரப் பிரிவு

உடபொத்த கிராம சேவகர் பிரிவு

கெந்தாவ கிராம சேவகர் பிரிவு

ஆகிய 13 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ காவல்துறை அதிகாரப்பிாிவுக்குட்பட்ட கலுஹக்கல மற்றும் பொல்ஹேன ஆகிய கிராம சேவகர் பிாிவுகளும், களுத்துறை தொடங்கொட காவல்துறை அதிகாரப் பிாிவுக்குட்பட்ட அதிகாரிகொட கிராம சேவகர் பிாிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Related posts

ONLINE பரீட்சைகளுக்கு தடை

நாளை கொழும்பில் வெள்ளை மலர்களுடன் நினைவேந்தல் நிகழ்வு

‘சைனோபாம்’ : 10 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு