(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளிலும் விசேட வீதித் தடை ஏற்படுத்தப்படும் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியதுடன், ஒவ்வொரு மாகாண எல்லையிலும் முப்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படியினர் வீதித் தடைகளை அமைப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாப் பயணம், குடும்பப் பயணங்கள் அல்லது வார இறுதி நாட்களில் ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்கு பயணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இன்று நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.