கிசு கிசு

நாளொன்றுக்கு 200 கொரோனா பலிகள்?

(UTV | வொஷிங்டன்) – நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றினால் நிகழும் மரணங்களின் வீதம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் நாட்டில் 56 மரணங்கள் பதிவாகியிருந்தன.

அந்த வகையில் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியிலிருந்து நாளொன்றுக்கு 200 பேர் என்ற எண்ணிக்கையில் கொவிட் மரணங்கள் நிகழக்கூடும் என ஊகிக்கப்படுகின்றது.

செப்டெம்பர் மாதமாகும் போது, இந்த மரண எண்ணிக்கையானது 20, 000 ஐ அண்மிக்கக் கூடும் என்றும் சுயாதீன உலக மக்கள் தொகை சுகாதார ஆராய்ச்சி மையம் எனப்படும் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவகத்தின்(IHME) ஆய்வின் ஊடாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது பரவும் கொவிட் அலைகள் மற்றும் முதலாம் அலை என்பன பிற நாடுகளை காட்டிலும் அதிகமாக இருப்பதைக் கண்டோம். இருப்பினும், பொதுமக்கள் கடைப்பிடிக்கும் சுகாதார விதிமுறைகள் மற்றும் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நோய்தடுப்பு நடவடிக்கைகளின் பிரகாரம் இந்த மதிப்பீட்டு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அந்த ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக விளங்கும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவகம் (IHME) உலகின் மிக முக்கியமான சுகாதார பிரச்சினைகள் தொடர்பான மதிப்பீடுகளை வழங்குவதுடன், அவற்றை நிவர்த்தி செய்ய பயன்படுத்தப்படும் உத்திகளையும் மதிப்பீடு செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு அமுல்படுத்த இதுதானாம் காரணம்

கோட்டாபயவுக்கு மாலைதீவு மக்களால் எதிர்ப்பு

ஸ்பைரட்மேனாக மாறிய வங்கி அதிகாரி… எதற்காக தெரியுமா?