உள்நாடு

எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் அரசுக்கு காலக்கெடு

(UTV | கொழும்பு) – சகல தனியார் பேருந்து சேவையாளர்களுக்கும் இவ்வாரத்துக்குள் கொரோனா தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசியை ஏற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிடின், பேருந்து சேவைகளில் இருந்து விலகிக் கொள்வதற்கு ஒன்றிணைந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்துள்ளோம் எனத் தெரிவித்த கெமுனு விஜேரத்ன, அதற்கிடையில் சகல தனியார் பேருந்துகளின் சேவையாளர்களுக்கும் தடுப்பூசியை ஏற்றுவதற்கான வழிவகைகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

தனியார் பேரூந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகளில் பலர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 27 பேர் பலி

கிழக்கில் ரயில் சேவை இரத்து!

சுகாதார அமைச்சராக கெஹெலிய, பவித்ராவுக்கு போக்குவரத்து அமைச்சு