உள்நாடு

ரிஷாதின் கைதுக்கு எதிராக கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் தனி நபர் பிரேரணை

(UTV | கொழும்பு) –  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் கடந்த 24ம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களது கைதுக்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில்; குறித்த கைதினை கண்டிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரணிஸ்லா அவர்களால் தனி நபர் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பிரேரணை;

பிரதேச சபை உறுப்பினர்,
கரைத்துறைப்பற்று.

செயலாளர்
பிரதேச சபை
கரைதுறைப்பற்று.

ஐயா,
கண்டண பிரேரணை தொடர்பாக….

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கெளரவ ரிஷாட் பதியுதீன் அவர்கள் அநியாயமான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரது கைது தொடர்பாக தொடர்ச்சியாக எதிர்கட்சி உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வருவதுடன் நாடெங்கிலும் மக்களால் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றது.

எந்த விதமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரை இந்த அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்து தடுத்து வைப்பதானது ஒரு மிகப்பெரிய ஜனநாயக விரோத செயல் என்பதோடு ஒரு பாரிய மனித உரிமை மீரளுமாகும். அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டிக்கும் வகையில் எமது பிரதேச சபை கண்டன தீர்மானம் ஒன்றினை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என இந்த கெளரவ சபையினை வேண்டிக்கொள்கிறேன்.

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் இந்த மாவட்ட மக்களின் பிரதிநிதி என்பதுடன் நமது மாவட்ட அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இச்சபையின் கெளரவ உறுப்பினர்கள் எனது இந்த பிரேரணைக்கு ஆதரவு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் தயவு செய்து சபை செயலாளர் அவர்கள் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
இவ்வண்ணம்

ரணிஸ்லா
பிரதேச சபை உறுப்பினர்.

பிரதி:

01.கெளரவ கமலநாதன் விஜிந்தன்
தவிசாளர்
கரைதுறைப்பற்று

02. கெளரவ உறுப்பினர்கள்

Related posts

ஜனவரி 60 முதல் ஓய்வூதியம் பெறும் சட்டம் அமுலுக்கு

அரச ஊழியர்களை மட்டுப்படுத்தி சேவைக்கு அழைக்க கோரிக்கை

பஸ் கட்டணங்கள் குறையும் சாத்தியம்