உள்நாடு

பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக இடம்பெறும் கொண்டாட்ட நிகழ்வுகள் , கருத்தரங்குகள் மற்றும் பொது போக்குவரத்து , வாடகை அடிப்படையில் போக்குவரத்து செயற்பாடுகளில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதுடன் , அவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

“.. கொவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த முதலாம் திகதி விசேட சுற்று நிறுபம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த சுற்று நிறுபத்தின் படி கொண்டாட்ட நிகழ்வுகள் , விருந்துபசாரங்கள் , செயலமர்வுகள் உட்பட மக்கள் ஒன்றுக்கூடும் அனைத்து செயற்பாடுகளும் தடைச் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் கண்காணிக்குமாறு குறிப்பிட்டு பொலிஸ் தலைமையகத்தினால், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்று நிறுபமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய , இந்த விடயங்கள் தொடர்பில் பொலிஸ் புலனாய்வு பிரிவினரை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..” எனத் தெரிவித்துள்ளார்.

 

Related posts

மீண்டும் பயணக் கட்டுப்பாடு தொடர்பிலான அறிவிப்பு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சில குழுவினர் வீடுகளுக்கு

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கம்