உள்நாடு

ரிஷாதின் கைது யாரை திருப்திப்படுத்த? – தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய கோரி ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக கண்டனப் போராட்டம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது எமது தலமைமை விடுதலை செய்?, ரிஷாத்தை ஏன் கைது செய்தாய் காரணத்தை வெளிப்படுத்து, அரசே ரிஷாதின் கைது யாரை திருப்திப்படுத்த, றிஷாத்தை விடுதலை செய் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு சமூக இடைவெளிகளைப் பேணி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

புனித நோன்பு காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை கைது செய்துள்ளமை கவலையளிப்பதுடன், எந்தவித முன்னறிவித்தலுமின்றி கைது செய்துள்ளமை மனவேதனையளிப்பதுடன், உடனடியாக நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் விசாரணை மேற்கொண்டு விடுதலை செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுப்பதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

 

Related posts

தலைமைத்துவத்தை வழங்கும் சவாலை ஏற்கத் தயார் – கரு

சம்பளம் வழங்க பணமில்லை : அரச கூட்டுத்தாபன காணியை விற்க தீர்மானம்

சீனாவிடமிருந்து 1500 மில்லியன் டொலர் கடன் பெறப்படும்