உலகம்

மியன்மாரில் தொடரும் பலிகள்

(UTV |  மியன்மார்) – நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்று பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தது.

தென்கிழக்கு நாடான மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் 1ம் திகதி இராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சுகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சாலையில் இறங்கி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 600 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இரு நாட்களாக ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தாமல் இருந்த நிலையில் நேற்று நடந்த போராட்டத்தில் மீண்டும் துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்று பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தது.

யான்கூன், மண்டேலே உள்ளிட்ட நகரங்களில் தீவிரமாக போர் நடந்தது. இதில் இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டடில் 7 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அமைப்புகள் சர்வதேச கவனத்தை ஈர்க்க மியன்மார் மக்களின் ஒற்றுமை குரல் உலகை உலுக்கும் என்ற முழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

  

Related posts

உலக அளவில் கொரோனா பாதிப்பு 60 கோடியை கடந்தது

சுவிட்சர்லாந்தில் பாலியல் வன்கொடுமை பற்றி அந்நாட்டு பாராளுமன்றில் விவாதம் நடைபெற்றுள்ளது

ராக்கை சேர்ந்த டிக்-டாக் பிரபலம் இசைக்கு நடனமாடும் வீடியோக்களால் சுட்டுக்கொலை