உள்நாடு

இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 4,642 பேர் கைது

(UTV | கொழும்பு) –   தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 187 பேர் இன்று (02) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவர்களில் அதிகமானோர் திருகோணமலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தினுள் பிரவேசிக்கும் மற்றும் வௌியேறும் 12 இடங்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வாகனங்களில் பயணித்த சுமார் 250 பேர் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார.

அதன்படி, இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 4,642 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு

கொரோனா : 19 ஆயிரத்தை கடந்தது

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..