(UTV | கொழும்பு) – நாட்டில் முழு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என வெளியான செய்தி தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்பது போலியான செய்தியாகும் அந்த போலியான செய்தி, யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பரவியிருந்தது” என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அந்தப் போலியான செய்தியில், முழு ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 30ஆம் திகதி நள்ளிரவு பிறப்பிக்கப்பட்டு, மே மாதம் 17ஆம் திகதிவரையிலும் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போலியான செய்தியால், பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.