உள்நாடு

தரம் 5 – பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியானது

(UTV | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பெறுபேறுகளின் மீள் திருத்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி மாணவர்கள் தற்சமயம் மறு திருத்த முடிவுகளை பரீட்சை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் தேதி நாடு முழுவதும் பரவிய கொவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் இப் பரீட்சைகள் நடைபெற்றன.

331,741 விண்ணப்பதாரர்களில் 326,264 பேர் கடந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எழுதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரீட்சை முடிவுகள் நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ்ப்பாணம் – சென்னை நேரடி விமான சேவைகள் மீளவும் ஆரம்பம்

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் தடைகள்

IMF உடன் செயற்பட குழு நியமனம்