உலகம்

வாய் வழியாக உட்கொள்ளும் பைசர் விரைவில்

(UTV |  நியூயோர்க்) – வாய் வழியாக உட்கொள்ளும் மருந்து உருவாக்கும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதாக பைசர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் ஊசி மூலம் உடலில் செலுத்தும் வகையில் உள்ளன. வாய் வழியாக உட்கொள்ளும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில், அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஒன்று.

கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் உருவாக்கும் வகையில் இரண்டு தடுப்பூசி மருந்துகளை உருவாக்கி வருகிறது பைசர் நிறுவனம். அதில் ஒன்று ஊசி மூலம் செலுத்தும் மருந்து, மற்றொன்று வாய் வழியாக உட்கொள்ளக்கூடிய மருந்து ஆகும்.

இந்நிலையில், வாய் வழியாக உட்கொள்ளும் மருந்தை உருவாக்கும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும், அடுத்த ஆண்டு மருந்து தயாராகிவிடும் என்றும் பைசர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் போர்லா கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.

வாய் வழியாக உட்கொள்ளும் மருந்து பல நன்மைகளை வழங்குகிறது. இந்த மருந்தை செலுத்துவதற்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. வீட்டில் வைத்தே இதனை உட்கொள்ளலாம் என ஆல்பர்ட் போர்லா கூறினார்.

Related posts

ஜப்பானில் பாடசாலைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவு

கொரோனா தாக்கத்தால் பாத்தேமேஹ் ரஹ்பர் உயிரிழப்பு

கொரோனா ஒழிப்பின் எதிர்பார்ப்பு சாத்தியமற்றது