(UTV | இந்தியா) – இந்தியாவில் பரவியுள்ள வீரியமடைந்த கொரோனா வைரஸ் மேலும் பல நாடுகளில் பரவி இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.50 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் வீரியமடைந்த கொரோனா வைரஸ் மேலும் 17 நாடுகளில் பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் பரவியுள்ள வீரியமிக்க கொரோனா வைரஸ் அறிகுறிகள் இன்றி நேரடியாக சுவாச பிரச்சினையை கொடுப்பதால் உலக நாடுகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளன.