உள்நாடு

சீன பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்ஹே, ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

இதன்போது, இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று நள்ளிரவு சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்.

எதிர்வரும் 29 ஆம் திகதி அவர் தமது இலங்கை விஜயத்தை நிறைவுசெய்து சீனா திரும்பவுள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.

 

Related posts

மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை

ஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்!