உள்நாடு

புர்கா மற்றும் நிகாப் இற்கு அமைச்சரவை தடை

(UTV | கொழும்பு) – சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்கள் தவிர்ந்த, புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சறுத்தலை ஏற்படுத்தும் ஏனைய முகமறைப்புக்களை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

முகத்தின் சில பாகங்களை மறைக்கும் வகையிலான முகமறைப்புகளை பயன்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான செயற்பாடுகள் தவிர்ந்த, பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைப்பதற்கு தடை விதித்து, இந்தப் புதிய சட்டமூலத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அடிப்படைவாதம் போன்றவை இருக்கின்ற சந்தர்ப்பத்தில், உண்மையில், இது தேசிய பாதுகாப்புக்கு மிகக் கடுமையாக தாக்கம் செலுத்தும் விடயமாகும்.

எனவே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களின் அடையாளத்தை பரிசோதிக்கும் நிலைமை இருக்க வேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புத்தாண்டை முன்னிட்டு கொவிட் தடுப்புக்கான செயற்பாடுகள் மீளாய்வு

குருநாகலில் தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஹம்பாந்தோட்டையில் ‘CHINA’ என்ற வார்த்தை வடிவத்தில் கட்டிடம்