உள்நாடு

ரிஷாத் – ரியாஜ் 90 நாட்கள் தடுப்பு காவலில்

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குறித்த இருவரையும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை(24) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்முனை மாநாகர சபையில் ஊழல் – சீ.ஐ.டியால் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கம்மறியல்

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 1,347 முறைப்பாடுகள் பதிவு.

editor

இசை நிகழ்ச்சிக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பணி இடைநிறுத்தம்