உள்நாடு

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து கம்பஹா மற்றும் களுத்துறையில் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

களுத்துறை மாவட்டத்தின்தெற்கு மற்றும் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் மிரிஸ்வத்த, பெலன்வத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று(26) இரவு 08 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும், கம்பஹா மாவட்டத்தின் பொல்ஹேன, ஹீரலுகெதர களுஅக்கல மற்றும் அஸ்வென்னவத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இன்று(26) இரவு 08 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

 

Related posts

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் – நிலந்த ஜெயவர்த்தனாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

editor

‘மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்’ – சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

ஒருநாள் சேவை மீண்டும் இன்று முதல் ஆரம்பம்