உள்நாடு

கொ​ரோனா சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன

(UTV | கொழும்பு) –  சுகாதார அதிகாரிகளின் முழுமையான அனுமதியில்லாமல், எந்தவொரு மத நிகழ்வுகள் அல்லது வேறு நிகழ்வுகளுக்கு பொலிஸார் அனுமதி வழங்கமாட்டார்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாள்களில் கொரோனா தொடர்பான சட்டத்திட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ள அவர்,மத நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கு சுகாதாரப் பிரிவினரின் அனுமதி கிடைத்திருந்தால் மாத்திரமே, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுதல் என்ற நிபந்தனையின் கீழ் ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட விடயங்களுக்கு அனுமதி வழங்குமாறு, சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Related posts

ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது

உதயங்க வீரதுங்க 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

editor