(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இனது கைதினை கண்டித்து முஸ்லிம் அரசியல் தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
நாட்டில் சட்டத்தின் ஆட்சி அதல பாதாளத்திற்குச் சென்றிருப்பதையே முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுத்தீனின் கைது எடுத்துக் காட்டுவதாகவும், அந்த ஜனநாயக விரோத நடவடிக்கை வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
கைது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலான தெரிவிக்கையில்; பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இனது கைதானது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் இவ்வாறே முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் கைதுகளும் அமையப் பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் சீஐடி யினரால் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
I condemn the predawn arbitrary arrest of former Minister @rbathiudeen! Like arrests of @hejaazh & @MAzathSSalley, if there is wrongdoing then bring it before a court of law! If not, then the reason for these despotic acts is to estrange a minority community for political gain! pic.twitter.com/2jTwwZXdlR
— Ali Zahir Moulana (@alizmoulana) April 24, 2021