உலகம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மீண்டும் பரிந்துரை

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் வெவ்வேறு வகையான தடுப்பூசிகளை கொரோனாவிற்கு பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் பல தடுப்பூசிகள் உள்ள நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி மட்டுமே ஒரே டோஸில் கொரோனாவை எதிர்க்க வல்லதாக உள்ளது.

ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் பலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அந்த தடுப்பூசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் படி அந்த தடுப்பூசியால் பலன்கள் அதிகமாக உள்ளதால் அவற்றின் மீதான தடையை நீக்கி பயன்படுத்த அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகைமை பரிந்துரைத்துள்ளது.

Related posts

மலேசியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை நீடிப்பு

ருமேனியா தீ விபத்தில் 10 பேர் பலி

பிரிட்டன் சுகாதார செயலாளருக்கு கொரோனா