உள்நாடு

கொரோனா : இது தீர்மானமிக்க தருணமாகும்

(UTV | கொழும்பு) – பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில், சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு அமைய, தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரியுள்ளார்.

சுகாதார அமைச்சர் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“.. யாத்திரைகள், சுற்றுலாக்கள் என்பனவற்றுடன், சிலர் புத்தாண்டு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்துள்ளனர். அவ்வாறானவற்றை கைவிடுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இது தீர்மானமிக்க தருணமாகும். தொற்றுக்குள்ளான நபர் என்ற ரீதியில், அந்த வைரஸ் தொற்றின் அபாயம் தொடர்பில் தாம் அறிவித்துள்ளோம்.

புதிய உரு திரிபடைந்த கொரோனா வைரஸ், ஒருவருக்கு தொற்றியுள்ளதை 14 நாட்கள் கடந்த பின்னரே கண்டறிய முடியும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் எந்தவொரு அறிகுறியும் இன்றி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இவ்வாறான நிலையில், முதலாவது அலையின்போது, பொதுமக்கள் சுகாதாரத்துறை வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட்டதை போன்று, தற்போதைய சூழலிலும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்..” என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரியுள்ளார்.

Related posts

நேற்று இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினர்

இன மத பேதங்களுக்கு அப்பால்   மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் – ரிஸ்லி முஸ்தபா

editor

அஸ்ட்ராசெனெகா : இரண்டாம் செலுத்துகை தொடர்பில் இன்று தீர்மானம்