உள்நாடு

ரிஷாதின் கைதும் ராஜபக்ஷவின் கொடூர ராணுவ முகமும்

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் இன்று(24) அதிகாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதனை கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தனது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“பாராளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர் நண்பர் #ரிசாத்_பதுர்தீனை இந்த ரமழான் மாதத்தில் “அதிகாலை 3 மணி” க்கு வீடு புகுந்து, தலைமறைவாக வாழும் பாதாள உலக கேடியை இழுத்து செல்வதை போல் கைது செய்ததன் பின்னுள்ள “ஆவேசம்” என்ன? #ராஜபக்ச அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா?” எனக் கோரியுள்ளார்.

 

Related posts

“பொத்துவில் பிரதேசத்தில் பலாத்காரமாக இடம்பெறும் காணி அளவீடுகளை உடன் நிறுத்த வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

விலங்குகள் நல சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அனுமதி

கடை உணவுகளுக்கு விலை அதிகரிப்பு