(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் இன்று(24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
The CID has been standing outside my house in Boudhaloka Mawatha since 1.30 am today attempting to arrest me without a charge. They have already arrested my brother. I have been in Parliament, and have cooperated with all lawful authorities until now. This is unjust.
— Rishad Bathiudeen (@rbathiudeen) April 23, 2021
“குற்றப்புலனாய்வு திணைக்கள உறுப்பினர்கள் (சீ.ஐ.டி) எனது பௌத்தாலோக மாவத்தையில் உள்ள எனது வீட்டினை அதிகாலை 1.30 மணியளவில் சுற்றிவளைத்து என்னை கைது செய்ய வந்துள்ளனர். அவர்களிடம் கைது செய்யப்படும் வகையில் பிடியாணைகள் இருக்கவில்லை. எனது சகோதரரையும் கைது செய்துள்ளனர். நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், எல்லாவிதத்திலும் நான் சட்ட ரீதியாக ஒத்துழைப்பு வழங்கினேன். இது அநியாயம்,” என முன்னாள் அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்டிருந்தார்.
இதேவேளை, தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தமது சகோதரர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாகவும், தம்மைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் என்னை கைது செய்வதற்கு முன்னர் சபாநாயகர் அறிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
“உங்களிடம் பிடியாணை உள்ளதா என கேட்டேன். அதற்கு பதிலளிக்கவில்லை. எனக்கு தெரியவில்லை இவர்கள் என்னை ஏன் கைது செய்கிறார்கள் என்று..
“நான் குற்றவாளி இல்லை. நான் பாவம் செய்யவில்லை. எனது கைகள் சுத்தமானவை.” குறித்த காணொளியில் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.
கைது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதி[அற அஜித் ரோஹன தெரிவிக்கையில், 2019 ஏப்ரல் 21 தாக்குதலின் தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவியமை மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியமை தொடர்பில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்று (24) அதிகாலை கைது செய்யப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்கின்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னதாக, கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் (IDB), Colossus (Pvt) Ltd தனியார் நிறுவனத்திற்கு உலோகம் விற்பனை செய்ததாக தெரிவிக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டின் மீது, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை ஒன்றினையும் விடுத்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும், ஆகையால் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, அக்குற்றச்சாட்டுக்கள் குறித்தான உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறு ஆணைக்குழுவின் தலைவருக்கு, எழுத்து மூலமான கோரிக்கை கடிதம் ஒன்றினை கடந்த 08ம் திகதி நேரில் சென்று சமர்ப்பித்திருந்தார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கூறியதாவது;
“கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழிருந்த, கைத்தொழில் அதிகார சபை, வருடம் ஒன்றுக்கு சுமார் முன்னூறு நிறுவனங்களுக்கு தேவையான மூலப் பொருட்களை வழங்கி வருகின்றது. அந்தவகையில், ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரி இன்ஷாப் அஹமட்டுக்கு சொந்தமான நிறுவனத்துக்கும் மூலப் பொருட்களை வழங்கியிருக்கின்றது. இந்த விற்பனை, கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உட்பட அதிகாரிகளின் மேற்பார்வையுடனேயே நடைபெறுவது வழமையானது. இவ்வாறான விடயங்களில், அமைச்சரான எனக்கு எந்தத் தொடர்புமில்லை. அத்துடன், இதில் நான் தலையீடு செய்வதும் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சில அரசியல்வாதிகள் என்னைக் குறிவைத்து கிளப்பிய புரளிகளில் இதுவும் ஒன்றாகும்” என அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த 07ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையின் விவாதம் : பாராளுமன்றில் ரிஷாத் பதியுதீன் ஆற்றிய உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு