உள்நாடு

நாட்டை முடக்குவதற்கு இதுவரையில் தீர்மானம் இல்லை

(UTV | கொழும்பு) – கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில், நாட்டை முடக்குவதற்கு இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

வார இறுதியில், மாவட்டங்களுக்கு இடையிலான நடமாட்டங்களைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதையும், சுற்றுலாக்களை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் எதிர்வரும் நாட்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

சித்திரைப் புத்தாண்டு காலத்தில், பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்காமையே இதற்கான காரணமாகும் என அவர் கூறினார்.

இதேவேளை, ஏதாவது ஒரு இடத்தில் குறிப்பிடத்தக்களவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால், அப்பகுதியை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மேலும் 68 கைதிகளுக்கு கொரோனா

நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் – பணி நீக்கம் செய்யப்பட பராமரிப்புத்துறைஉதவிப் பணியாளர்!