கிசு கிசு

ஹரீனின் இரத்த அழுத்தம் மற்றும் நாடித் துடிப்பு அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு இன்றைய தினம் இரகசிய பொலிசார் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பிலான முறைப்பாட்டுக்கு அமைய வாக்குமூலம் ஒன்றினை பெறுவதற்கே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஹரீன் பெர்னாண்டோ தற்போது நவலோக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) காலை நவலோக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஹரின் பெர்னாண்டோவைப் பார்வையிட்டார்.

குறித்த புகைப்படங்களில் ஹரீன் பெர்னாண்டோவின் இரத்த அழுத்தம் மற்றும் நாடித் துடிப்பு ஆகியவை அதிகரித்துள்ள விதமாக அவருக்கு பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்தில் காட்டப்பட்டுள்ளது.

Related posts

பூஜித் ஜயசுந்தரவுக்கு கட்டாய விடுமுறை?

இப்படியொரு பொலிஸ் அதிகாரியா?

மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள்..