உள்நாடு

அசேல சம்பத்திற்கு பிணை

(UTV | கொழும்பு) – நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளிடம் கடுந்தொனியில் பேசியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளிடம் கடுந்தொனியில் பேசியமை தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றம் சந்தேக நபருக்கு எதிராக திறந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத்தை கொம்பனித்தெரு பொலிஸாரால் கடந்த 13ம் திகதி கைது செய்திருந்தனர்.

அவர் 14ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்றைய தினம் மீண்டும் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

Related posts

இலங்கையில் மீண்டும் அறிமுகமாகும் QR முறை!

பெல்ஜியத்தில் இருந்த 43 பேர் நாடு திரும்பினர்

கோட்டாபயவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி