உலகம்

அடங்கினார் இளவரசர் சார்லஸ்

(UTV |  இங்கிலாந்து) – இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இயற்கை எய்திய நிலையில் அவரது இறுதி ஊர்வலம் மக்கள் கூட்டமின்றி நடந்து முடிந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் இளவரசரும், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவருமான இளவரசர் பிலிப் வயது மூப்பு காரணமாக கடந்த 9ம் திகதி உயிரிழந்தார். அரச குடும்ப வழக்கப்படி அவரது மறைவுக்கு 8 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் வின்ஸ்டர் கோட்டையில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொதுவாக அரச குடும்பத்தினர் இறந்து விட்டால் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் வருவார்கள். ஆனால் இந்த முறை கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் யாரும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை. அரச குடும்பத்தினர் 30 பேர் மட்டுமே இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். லண்டனில் மக்கள் கூட்டமின்றி நடந்த முதல் அரச குடும்பத்தின் இறுதி மரியாதை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்திலும் அவசர நிலை பிரகடனம்

“கட்டார் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு” புதிய தடை

ஈரானின் 4 சரக்கு கப்பல்கள் அமெரிக்காவினால் பறிமுதல்