உலகம்

ஈரான் குலுங்கியது

(UTV |  ஈரான்) – ஈரானில் 5.6 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன் மையப்பகுதி புஷெர் நகரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஈரான் அடிக்கடி நிகழும் நிலநடுக்கங்களுக்கு பெயர் பெற்றது, ஏனெனில் நாட்டின் பெரும்பகுதி பிளவுக் கோடுகளுக்கு அருகில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அவுஸ்திரேலியாவில் 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 இலட்சத்தை தாண்டியது

இத்தாலியில் கொவிட் – 19; முதியவர் பலி