உள்நாடு

இலங்கை பொலிஸுக்கு சீன வானொலி அமைப்பு

(UTV | கொழும்பு) – காவல்துறையினருக்கான தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த சீன அரசு இலங்கைக்கு தொடர்பாடல் தொழில்நுட்ப உபகரணங்களை மானியமாக வழங்க உள்ளதாக ஆங்கிலச் செய்தித்தாளான ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீன மானியத்தின் ஒரு பகுதியாக, மூத்த அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக டெட்ரா – டெரெஸ்ட்ரியல் ட்ரங்கட் ரேடியோ (TETRA — Terrestrial Trunked Radio) என அழைக்கப்படும் பரவலாக பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு வசதியினை காவல்துறைக்கு வழங்க ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும் உடல் கெமராக்களுக்கு ஒத்துப்போகும் வகையில் தகவல்களை டெப் இனூடாக பகிர்ந்து கொள்ளும் வகையில் குறித்த தொழில்நுட்பம் செயல்படும் வகையில் இது அமையப் பெற்றுள்ளது. இது ஆரம்பத்தில் மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீன மாநில கவுன்சிலரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் வெய் ஃபெங்( General Wei Fengh)இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தரும் போது இந்த மானியம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இனி இலங்கை மக்களின் வருமானத்தில் பெருக்கம் ? அரசு வெளியிட்டுள்ள நம்பிக்கை

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பகுதியளவில் தளர்வு

பேலியகொடை மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா உறுதி