வகைப்படுத்தப்படாத

13 வயது பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்…இளவயது சந்தேகநபர் சிக்கினார்!!

(UDHAYAM, COLOMBO) – மகியங்கனை பிரதேசத்தில் பாடசாலை சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பின்னர் தப்பிச்சென்று தலை மறைவாக இருந்த சந்தேகநபரொருவர் முந்தளம் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகியங்கனை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பாடசாலை மாணவிக்கு வயது 13 ஆகும் .

சந்தேகநபர் முந்தளம் – பரனன்கட்டுவ பிரதேசத்தின் வீடொன்றில் தலைமறைவாக இருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளவயது சந்தேகநபர் புத்தளம் பதில் நீதவான் ரம்சி சம்சுதீன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டதை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் , சந்தேகநபரை மகியங்கனை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பதில் நீதவான் நீர்க்கொழும்பு சிறை பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பிஜி தீவுகளில் கடும் நிலநடுக்கம்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது

680 மில்லியன் டொலர் ஊழல்