(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 221 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,832ஆக உயர்வடைந்துள்ளது.