உள்நாடு

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

(UTV | கொழும்பு) –  புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களை நோக்கி பயணித்த மக்கள் மீள கொழும்பு திரும்புவதற்காக இன்று(15) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அந்த சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக சுவர்ணாஹங்ச இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மேலதிகமாக 200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தூர பிரதேசங்களுக்கான பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலே இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே காலமானார்

மஸ்கெலியாவில் உணவு நிலையங்களில் திடீர் சோதனை

பேருந்து விபத்தில் 12 பேர் பலி – மேலும் பலர் கவலைக்கிடம் [VIDEO]