உள்நாடு

இலங்கையின் தடையினால் இந்தியாவின் பாதுகாப்பு பலமாகிறது

(UTV | கொழும்பு) –  அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்ய இலங்கை அரசு தீர்மானம் எடுத்துள்ளதையடுத்து, இந்தியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லாம் என்ற சந்தேகத்தில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதால், இலங்கையில் தங்கியிருந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இவர்களின் இலக்கு இந்தியாவாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

இதேவேளை;
1. UTJ எனப்படும் ஐக்கிய தௌஹீத் ஜமா -அத்
2. CTJ எனப்படும் சிலோன் தௌஹீத் ஜமா -அத்
3. SLTJ எனப்படும் ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமா -அத்
4. ACTJ எனப்படும் அகில இலங்கை தௌஹீத் ஜமா -அத்
5. JSM எனப்படும் ஜமயத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா
6. தாருள் அதார் @ ஜமியுல் அதார் (Dharul Aadhar @ Jamiul Aadhar)
7. SLISM எனப்படும் இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம்
8.ISIS அமைப்பு
9. அல்கைதா (Al-Qaeda)
10. Save the Pearls அமைப்பு
11. Super Muslim

என 11 இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களை இலங்கையில் தடை செய்வது குறித்த விசேட வர்த்தமானி நேற்றைய தினம் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவிலிருந்து 430 பேர் குணமடைந்தனர்

ஆட்சியாளர்கள் இனவாதத்தை ஏற்படுத்தினாலும் நாம் இன மதபேதமின்றி ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

editor

பணிக்கு சமூகமளித்த ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு