விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ஓட்டங்களால் வெற்றி

(UTV |  இந்தியா) – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

மும்பையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 222 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

நேற்றைய போட்டியில் 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சம்சன் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்.

Related posts

பங்களாதேஷ் அணியிடம் வீழ்ந்தது மே.இ.தீவுகள் அணி

‘இப்போதைக்கு இந்தியாவில் வாய்ப்பில்லை’

ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய 3வது வீரர்