உள்நாடு

மே மாதம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்

(UTV | கொழும்பு) – நாட்டு மக்கள் கொவிட் வைரஸ் தொற்றுத் தடுப்புக்கான சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்படும் பட்சத்தில், எதிர்வரும் மே மாதம் முதல் மிக மோசமான பெறுபேறுகளைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என வைரஸ் தொற்றுத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“.. கொவிட் தடுப்புச் சட்டங்களை மீறி பொருள் கொள்வனவுகளில் ஈடுபடும் மக்கள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.

மக்கள் இவ்வாறு கட்டுப்பாடின்றி செயற்படும் பட்சத்தில், எதிர்வரும் மே மாதம் முதல் மிக மோசமான பெறுபேறுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

சித்திரைப் புத்தாண்டு காலப் பகுதியில் கோவிட் தடுப்பு தொடர்பான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்படும் பட்சத்தில், வேறு எந்தவொரு பண்டிகைகளையும் கொண்டாட முடியாது போகும்.

பெருமளவான மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது..” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இன்றைய வானிலை

நெல் கொள்வனவுக்கான விலையில் திருத்தம்

சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

editor