உள்நாடு

நான்கு முகங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் பரிசு

(UTV | கொழும்பு) – நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மோசடியில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

அதற்கமைய, குறித்த நபர் தன்னை வைத்தியர், பொறியியலாளர், ஆசிரியர், வர்த்தகர் என இனம்காட்டிக்கொண்டு, பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தன்னை வைத்தியராக அடையாளப்படுத்திக்கொண்டு, கொள்ளையடிக்கப்பட்ட வாகனமொன்றை 165 இலட்சத்துக்கும் போலி கையெழுத்தைப் பயன்படுத்தி 1,550,000 ரூபாய் பெறுமதியான வாகனத்தை பெற்றுக்கொண்டமை, 30 இலட்சம் பெறுமதியான வானை கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த சந்தேகநபர் மேலும் பல மோசடிகளில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ள பொலிஸார், இவரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபரின் பெயர் ராசிக் மொஹமட் பாருக் என்பதுடன், இவர் இலக்கம்.122/15 பி மாங்கட வீதி, கடவத்த, 133/05 நாமல் டெரன்ஸ், வட்டியகொட, 89/03 ரஜமாவத்த, கனுவன, ஜாஎல ஆகிய முகவரிகளைச் சேர்தசர என்றும் தெரிவித்துள்ள பொலிஸார் இவரைக் கண்டுபிடித்துகக் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் ரூபாயை அன்பளிப்பாக வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எனவே இவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், 071- 8592604, 0112-2685958 ஆகிய  தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு

பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட சலுகை!

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் –மொத்தம் 219 பேர் அடையாளம்