உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் சென்ற கார் தொடர்பில் விசாரணை

(UTV | கொழும்பு) – அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் சென்ற கார் தொடர்பாக பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நீல நிற கார் ஒன்றில் பயணிக்கும் 4 இளைஞர்கள் அதன் ஜன்னல் கண்ணாடிகளை தாழ்த்தி சரீரத்தை வாகனத்தின் வெளிப்புறத்தில் இருக்குமாறு பாதுகாப்பற்ற முறையில் அமர்ந்து செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

வாகனமொன்றில் பயணிக்கும் போது இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றச் செயல் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாகனத்தின் உரிமையாளர் வாகனத்தை பதிவு செய்யாமல் வேறொரு நபருக்கு வழங்கியுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஒரு உளுந்து வடை மற்றும் ஒரு கப் தேனீர்க்கு 1000/- ரூபா

ஹோட்டல் உணவு வகைகளின் விலைகளும் உயர்வு

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட வேண்டுகோள்.

editor