(UTV | நோர்வே) -கொரோனா விதிமுறைகளை மீறியதாக நோர்வே பிரதமருக்கு 1.70 இலட்சம் ரூபாய் அபராதத்தினை அந்நாட்டு பொலிசார் விதித்துள்ளனர். சட்டம் எல்லோருக்கும் சமம் என்பது நோர்வேயில் கடைபிடிக்கப்படுகிறது. அந்த ஊர் மக்களும் அதை உறுதியாக நம்புகிறார்கள்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. பிரேசில். இந்தியா, அமெரிக்கா, மெக்ஸிகோ, போலந்து உள்பட பல்வேறு நாடுகளில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் நோயின் தாக்கம் குறையவில்லை. உயிரிழப்பும் அதிகமாகவே உள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.