உலகம்

பணக்கார நாடுகள் மீது உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு

(UTV |  ஜெனீவா) – கொரோனா தடுப்பு மருந்துகளை பணக்கார நாடுகள் அதிக அளவில் பெறுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளை உருவாக்கி உள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசிகளை தங்களது குடிமக்களுக்கு செலுத்தி வருகின்றன.

ஆனால் ஏழை மற்றும் நடுத்தர நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க மிகவும் சிரமப்படுகின்றன. இதனால் அந்நாட்டு மக்கள் தடுப்பூசி கிடைக்காமல் தவிக்கிறார்கள்.

இதையடுத்து உலக சுகாதார அமைப்பு ‘கோவாக்ஸ்’ என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து தடுப்பு மருந்துகளை பெற்று ஏழை நாடுகளுக்கு அளித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்துகளை பணக்கார நாடுகள் அதிக அளவில் பெறுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

Related posts

கொரோனாவைத் தொடர்ந்து கொங்கோவில் எபோலா ஆதிக்கம்

சிறுவனின் உயிரைப் பறித்த ஓட்டப் பந்தயம்!

இறுகியது பிரித்தானியா