விளையாட்டு

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி – இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணிக்கும் இடையில் மோதல்

(UTV | கொழும்பு) – இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணிக்குமிடையில் கிரிக்கெட் போட்டியொன்றை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் யோசனையொன்று அண்மையில் முன்மொழியப்பட்டிருந்தது.

அமைச்சரின் யோசனையை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம், இலங்கை கிரிக்கெட் அணிக்கும் முன்னாள் வீரர்களைக் கொண்ட இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணிக்கும் இருபதுக்கு 20 போட்டியை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் முடிந்ததும், இப்போட்டியை நடத்த தீர்மானித்துள்ளது.

இதன்படி, இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடத்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

Related posts

28 வருட வெற்றியினை விட்டுக்கொடுக்க தயாரில்லை

ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி…

பிரபல கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஸ்பெயினிற்கு நன்கொடை