உள்நாடு

ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் அடுத்த வாரம் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) –  ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் முற்பதிவு செய்யப்பட்ட 7 இலட்சம் தடுப்பூசிகளின் முதற்கட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை ஒரு இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் தடுப்பூசி ஏற்றப்பட்டு 21 நாட்களில் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

 

Related posts

அதிவலு கொண்ட மின்சாரக் கம்பி அறுந்து வீழ்ந்ததில் இருவர் பலி

ரூ.5,000 கொடுப்பனவு தொடர்பில் பிரதமர் அலுவலகம் விஷேட அறிவிப்பு

தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் – சுமந்திரன்

editor