விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வட கொரியா வெளியேறியது

(UTV |  வட கொரியா) – ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இம்முறை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என வட கொரியா அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தமது விளையாட்டு வீரர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வட கொரியா குறிப்பிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா மற்றும் தென் கொரிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள் இணைந்து போட்டிகளில் பங்கேற்றன.

1988 ஆம் ஆண்டின் பின்னர் வட கொரியா இம்முறை ஒலிம்பிக் போட்டிகளை தவறவிடுகின்றது.

Related posts

இலங்கை ஜூடோ அணி சார்பாக சாமர

Jaffna Stallions அணி : புதிய இரண்டு புள்ளிகள் [VIDEO]

இலங்கை – ஆஸி அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று