உள்நாடு

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

(UTV | கொழும்பு) –  சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்களுக்காக பஸ் சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கு தடைகளின்றி போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புத்தாண்டு காலத்தில் விசேட புகையிரத சேவைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் பிரதான புகையிரதப் பாதை மற்றும் கரையோரப் புகையிரதப் பாதை உட்பட அனைத்து புகையிரதப் பாதைகளூடாகவும் விசேட புகையிரத சேவைகள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இந்த விசேட புகையிரத சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம் தற்போது இல்லை

வெடுக்குநாறி சிவராத்திரி சம்பவம்: 08 பேர் நீதிமன்றில் ஆஜர்

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம்!