உள்நாடுவணிகம்

பாம் எண்ணெய் தடை : பேக்கரி உற்பத்திகளில் வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – நாட்டில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தினால் பேக்கரி உற்பத்தி முற்றிலும் சரிந்து விடும் என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி பொருட்களில் அத்தியாவசியமான மார்கரைன் பாம் எண்ணெயை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், அதைத் தடை செய்வது அனைத்து பேக்கரி பொருட்களிலும் பல சிக்கல்களை எற்படுத்துகிறது.

எனவே அரசாங்கம் எடுக்கும் இந்த முடிவை கடுமையாக எதிர்ப்பதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன கூறினார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய பணிப்புரையின்பேரில் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிடுமாறு ஜனாதிபதியின் செயலாளர் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதான பாதை ரயில் சேவையில் பாதிப்பு

சுற்றுலா துறையை மேம்படுத்த – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை.

Oracle Cloud அப்ளிகேஷன் ஊடாக MillenniumIT ESP க்கு வலுவூட்டல்