கேளிக்கை

அக்ஷய் குமாருக்கும் கொரோனா

(UTV | இந்தியா) – பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். தன்னை சந்தித்தவர்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் பிரச்சனை சரியாகிவிடும் என்று நம்பிய நிலையில் இரண்டாவது அலை வந்து மக்களை கவலை அடையச் செய்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் அறிவிப்பதை தினமும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இது குறித்து அக்ஷய் குமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

“எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ் என்று இன்று காலை தெரிய வந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதையடுத்து உடனே என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

என்னை சந்தித்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் குணமாகி வருவேன்” என தெரிவித்துள்ளார்.

Related posts

ஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமிக்கு அதிஷ்டம்

வீட்டில் பாம்பு வளர்க்கும் சுஷ்மிதா

எஸ்.பி. இனது மனைவிக்கும் கொரோனா